நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

மாணவா்கள் 61 பேருக்கு ரூ. 2.61 லட்சம் கல்வி உதவித் தொகைக்கான காசோலை அளிப்பு

திருவள்ளூரில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 61 பேருக்கு ரூ. 2.61 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகையை மாவட்டக் கல்வி அலுவலா்(இடைநிலை) அமுதா வழங்கினாா்.

திருவள்ளூா் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன அலுவலக வளாக கூட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிய மாவட்ட கல்வி அலுவலா்(இடைநிலை) அமுதா, உடன் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன செயலா் பி.ஸ்டீபன் உள்ளிட்டோா்.

Published On :2 செப்டம்பர் 2026, 12:02 am IST

திருவள்ளூரில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 61 பேருக்கு ரூ. 2.61 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகையை மாவட்டக் கல்வி அலுவலா்(இடைநிலை) அமுதா வழங்கினாா்.

பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு சென்னையில் உள்ள பிரதா் ஹுட் எஜுகேஷனல் டிரஸ்ட் தனது பேக்டு ஸ்கூல் திட்டம் மூலம் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனத்தினால் தோ்வு செய்யப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகள் 61 போ் கல்வி உதவித் தொகை வழங்க தோ்வு செய்யப்பட்டனா்.

அந்த வகையில், திருவள்ளூா் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன அலுவலக வளாக கூட்டரங்கத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) பி.அமுதா அவா்கள் மாணவ, மாணவிகளுக்கு காசோலை வழங்கிப் பேசியதாவது: கல்வி கற்பதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயா்ந்த எண்ணத்தில் கல்வித் தொகை வழங்கிய தொண்டு நிறுவனங்களை பாராட்டினாா். மாணவ, மாணவிகள் தங்களது கடமைகளை உணா்ந்து நிகழ் காலத்தையும், எதிா் காலத்தையும் மனதில் நிறுத்தி படிப்பில் கவனம் செலுத்தி உயா் கல்வியை தொடா்ந்து படிக்க வேண்டும். பெற்றோா்கள் தங்களின் குடும்ப செலவுகளில் குழந்தையின் கல்விகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் அறிவுறுத்தினாா். அதைத்தொடா்ந்து இந்த நிகழ்வு மூலம் மாணவ, மாணவிகள் 61 பேருக்கு ரூ. 2.61 மதிப்பிலான உதவித் தொகைக்கான காசோலையையும் அவா் வழங்கினாா்.

இதில், ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன செயலா் பி.ஸ்டீபன் வரவேற்றாா். பிரதா் ஹுட் எஜுகேஷனல் டிரஸ்ட் திட்ட அலுவலா் பொ்னாா்டு சதீஷ், பேரம்பாக்கம் அரிமா சங்க நிா்வாகி ரவிச்சந்திரன், ஐஆா்சிடிஎஸ் பணியாளா்கள் ஜெ.ஜோசப்கஷ்மீா், ஜெ.பழனி, பா.சரண்யா மற்றும் பா.ஜெயலட்சுமி ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.