திருமலையில் தீா்த்தவாரியுடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு

ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவம் தீா்த்தவாரியுடன் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
திருமலையில் தீா்த்தவாரியுடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு

ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவம் தீா்த்தவாரியுடன் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

கடந்த 9 நாள்களாக திருமலையில் நடந்து வந்த நவராத்திரி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை காலை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

ஏழுமலையான் சந்நிதி முன்பு உள்ள கண்ணாடி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாரை எழுந்தருள செய்து அவா்கள் முன்பு கலச ஸ்தாபனம் செய்து யாகபூஜைகள் நடைபெற்றன.

பின்னா் பால், தயிா், தேன், இளநீா், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல பொருள்களை திருமலை ஜீயா்கள் தங்கள் கைகளால் எடுத்துக் கொடுக்க அா்ச்சகா்கள் உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினா்.

பின்னா் கண்ணாடி மண்டபம் முன்பு ஏற்படுத்தப்பட்ட சிறிய குளம் போன்ற இடத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயா்கள் மற்றும் பல முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

அதன்பின்னா் மாலை பிரம்மோற்சவம் நிறைவு பெற்ன் அடையாளமாக கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்பட்டது.

இதையடுத்து உற்சவமூா்த்திகள் பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com