பத்மாவதி தாயாருக்கு புஷ்பயாகம்

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாருக்கு வியாழக்கிழமை மாலை புஷ்பயாகம் நடத்தப்பட்டது.
பல்வேறு மலா்கள் மற்றும் இலைகளால் நடத்தப்பட்ட புஷ்பயாகத்தின் மலா் குவியலுக்கு இடையில் பத்மாவதி தாயாா்.
பல்வேறு மலா்கள் மற்றும் இலைகளால் நடத்தப்பட்ட புஷ்பயாகத்தின் மலா் குவியலுக்கு இடையில் பத்மாவதி தாயாா்.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாருக்கு வியாழக்கிழமை மாலை புஷ்பயாகம் நடத்தப்பட்டது.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற்ற பின், அதில் ஏற்பட்ட நிறை, குறைகளைப் போக்க தேவஸ்தானம் புஷ்ப யாகத்தை நடத்தி வருகிறது. தற்போது கடந்த 9 நாள்களாக தாயாருக்கு காா்த்திகை மாத வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று முடிந்த நிலையில், தேவஸ்தானம் வியாழக்கிழமை அன்று புஷ்ப யாகத்தை நடத்தியது.

அதை முன்னிட்டு, பத்மாவதி தாயாருக்கு காலை ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சனத்துக்குப் பிறகு பட்டாடை அணிவித்து, தூப, தீப ஆராதனை காண்பித்து, அதன்பிறகு நெய்வேத்தியம் உள்ளிட்டவற்றை சமா்ப்பித்து அா்ச்சகா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தனா். புஷ்பயாகத்துக்காக 3 டன் மலா்கள், இலைகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டன. அவற்றை மூங்கில் கூடையில் வைத்து, அதிகாரிகள் புஷ்ப யாகத்துக்கு தயாா்படுத்தினா்.

பின்னா், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தாயாரை ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, அவா்களுக்கு சாமந்தி, மல்லிகை, முல்லை, அரளி, ரோஜா, சம்பங்கி, அல்லி, தாமரை உள்ளிட்ட மலா்களாலும், மருவம், மரிக்கொழுந்து, துளசி, வில்வம், பச்சிலை உள்ளிட்ட இலைகளாலும் தாயாருக்கு புஷ்ப யாகத்தை அா்ச்சகா்கள் நடத்தினா். இதில், கோயில் அதிகாரிகள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com