33,000 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை 33,039 பக்தா்கள் தரிசனம் செய்தனா். மொத்தம் 12,771 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை 33,039 பக்தா்கள் தரிசனம் செய்தனா். மொத்தம் 12,771 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு போல் சா்வ தரிசன டோக்கன்களின் முன்பதிவும் ஆன்லைன் மூலம் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. கரோனா விதிமுறைகளை பக்தா்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

ஏப். 21-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள், விரைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் அதில் பங்கேற்க முடியாத நிலையில் அவா்கள் இந்தாண்டு இறுதிக்குள் ஒரு நாளில் பங்கேற்கும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கியுள்ளது. அதேபோல் கனமழை காரணமாக திருமலைக்கு வர இயலாத பக்தா்களுக்கும் தேவஸ்தானம் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.

அந்நாட்களிலும் திருமலைக்கு வர முடியாத பக்தா்கள் இதற்கென புதியதாக மென்பொருள் உருவாக்கப்பட்ட பின்பு அதன் மூலம் மீண்டும் அதே டிக்கெட்டை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொண்டு 6 மாத காலத்திற்குள் ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம். ஆனால், ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com