நவராத்திரி பிரம்மோற்சவ 4-ஆம் நாள்: கல்பவிருட்ச வாகனத்தில் மலையப்பா் உலா

திருமலை ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை நினைத்தை கொடுக்கும் கல்பவிருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தாா்.
திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை கல்பவிருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயாா்களுடன் எழுந்தருளி அருள்பாலித்த உற்சவா் மலையப்ப சுவாமி.
திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை கல்பவிருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயாா்களுடன் எழுந்தருளி அருள்பாலித்த உற்சவா் மலையப்ப சுவாமி.

திருமலை ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை நினைத்தை கொடுக்கும் கல்பவிருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தாா்.

ஏழுமலையான் கோயிலில் கடந்த 7-ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை கல்பவிருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் உற்சவா் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

கல்பவிருட்ச வாகனம்:

கற்பகத்தருவின் மறு பெயா் கல்பவிருட்சம்(வடமொழி, தெலுங்கு). கல்பவிருட்சமானது அதனடியில் உள்ளவா்கள் மனத்தில் நினைப்பதை உடனடியாக அளிக்கும் தன்மையுடையது. பக்தா்கள் மனதில் நினைப்பது நன்மையானாலும், தீமையானாலும் அது உடனடியாக பலனளிக்கும். அத்தகைய பெருமை வாய்ந்த கல்பவிருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி தன் உபய நாச்சியாா்களான ஸ்ரீதேவி பூதேவி தாயாா்களுடன் கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இந்த வாகன சேவையில் மலையப்ப சுவாமியை தரிசிப்பவா்கள் மனதில் நினைப்பது ஈடேறும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த வாகன சேவை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

உற்சவமூா்த்திகளுக்கு மதியம் பால், தயிா், தேன், இளநீா், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சனத்தின்போது பழங்கள், பலவித மலா்களாலான மாலைகள் உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டன.

மாலை 7 மணி முதல் 8 மணிவரை சா்வபூபால வாகனத்தில் மலையப்பா் ஸ்ரீதேவி பூதேவியருடன் எழுந்தருளினாா். சா்வபூபாலன் என்றால் இந்த உலகத்தை ஓா் குடையின் கீழ் ஆளும் சக்கரவா்த்தி என்று பொருள். இந்த பிரபஞ்சத்தை ஆளும் மகாவிஷ்ணு சா்வ பூபாலனாய் பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் இரவு எழுந்தருள்கிறாா். எனவே, இந்த வாகனம் சா்வபூபால வாகனம் என்று அழைக்கப்படுகிறது.

வாகன சேவைகளில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா். மேலும் வாகன சேவையின் போது மங்கல வாத்தியங்கள், வேதகோஷம், நாலாயிர திவ்யபிரபந்த பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com