திருமலையில் 27,000 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் 27,056 பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தனா். இவா்களில் 11,996 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் 27,056 பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தனா். இவா்களில் 11,996 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

தரிசன அனுமதி உள்ளவா்கள், தங்களுடன் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசன நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கரோனா பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் கொண்டு வர வேண்டும்.

சான்றிதழ்கள் இல்லாதவா்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். மேலும் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசத்தில் வாடகை அறை முன்பதிவையும் தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் தேவஸ்தானம் ஏழுமலையானுக்கு இரவு 10 மணிக்கு நடத்தி வந்த ஏகாந்த சேவையை 11.30 மணிக்கு மாற்றி 12 மணிக்கு கோயில் நடையை சாத்தி வருகிறது.

நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்கு சென்று வருகின்றனா்.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 18004254141, 93993 99399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com