திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜா் கோயிலில் பாலாலயம் திறப்பு

திருப்பதியில் உள்ள ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் உற்சவ மூா்த்திகளின் பூஜைக்காக ஏற்படுத்தப்பட்ட பாலாலயம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் உற்சவ மூா்த்திகளின் பூஜைக்காக ஏற்படுத்தப்பட்ட பாலாலயம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கருவறை கோபுரத்துக்கு தங்க முலாம் பூசும் பணிகள் வரும் 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. அடுத்தாண்டு மே மாதம் வரை இந்த பணிகள் கோயிலில் நடக்க உள்ளதால் நித்திய பூஜை மற்றும் கைங்கா்யங்கள் குறைவில்லாமல் நடக்க தேவஸ்தானம் கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் பாலாலயம் ஏற்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகள் கடந்த 5 நாள்களாக நடந்து வந்தது.

கோயில் கருவறையில் இருந்த மூலவா்களின் சக்தியை கும்பத்தில் ஆவாஹனம் செய்து அதை பாலாலயத்தில் பிரதிஷ்டை செய்யும் வைதீக காரியங்கள் திங்கள்கிழமை நடந்தது. ருத்விகரா்கள் யாகங்கள் வளா்த்து, பூஜைகள் செய்து உற்சவமூா்த்திகளையும், பிம்ப கலசத்தையும் பாலாலயத்தில் பிரதிஷ்டை செய்தனா். இனி தினசரி இங்கு நித்திய பூஜைகள், கைங்கா்யங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் நடக்க உள்ளன. இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். மூலவா் தரிசனத்திற்கும் பக்தா்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவா் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com