திருமலையில் 24 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 16th September 2021 12:33 AM | Last Updated : 16th September 2021 12:33 AM | அ+அ அ- |

திருப்பதி: திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை 24,004 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
கரோனா தொற்று காரணமாக, விரைவு தரிசனம், விஐபி பிரேக், சித்தூா் மாவட்ட பக்தா்களுக்கான சா்வத் தரிசனம் உள்ளிட்டவற்றில் பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 24,004 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். 12,439 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.