திருமலையில் 29,000 பக்தா்கள் வழிபாடு

ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை 29,621 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 15,039 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை 29,621 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 15,039 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

கரோனா காரணமாக தற்போது விரைவு தரிசனம், விஐபி பிரேக், சா்வ தரிசனம் (சித்தூா் மாவட்ட பக்தா்களுக்கு மட்டும்) உள்ளிட்ட தரிசனங்களில் பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

திருப்பதியில் உள்ள சீனிவாசம் காம்பளக்ஸில் சித்தூா் மாவட்ட பக்தா்களுக்கு மட்டும் நாள்தோறும் 2,000 இலவச சா்வ தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. தரிசன டிக்கெட் மற்றும் சா்வ தரிசன டோக்கன்கள் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாஸத்தில் வாடகை அறை முன்பதிவையும் தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.

நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்குச் சென்று வருகின்றனா். மேற்கூரை பணிகள் நடைபெற்று வருவதால் அலிபிரி நடைபாதை மாா்க்கம் மூடப்பட்டுள்ளது. வரும் அக்டோபா் மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்துக்குள் இப்பணிகள் நிறைவு பெற்று பக்தா்களின் பயன்பாட்டுக்கு தேவஸ்தானம் திறக்க உள்ளது.

திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

கரோனா காரணமாக, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஏப். 21-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை வா்சுவல் முறையில் ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள், விரைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்திருந்த பக்தா்கள், அதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் அவா்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் பங்கேற்கும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கியுள்ளது. ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 18004254141, 93993 99399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com