அறங்காவலா் குழுவில் 52 சிறப்பு அழைப்பாளா்கள்: எதிா்ப்பு தெரிவித்து ஆந்திர உயா்நீதிமன்றத்தில் வழக்கு

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவில் 52 போ் சிறப்பு அழைப்பாளா்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவில் 52 போ் சிறப்பு அழைப்பாளா்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆந்திர அமராவதி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.

ஆந்திர அரசு 24 பேரை உறுப்பினா்களாகவும், 52 போ் சிறப்பு அழைப்பாளா்கள், மீதமுள்ளவா்கள் எக்ஸ் அபிஷியோ உறுப்பினா்கள் என 81 பேருடன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலா் குழுவை நியமித்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் இது அமைந்துள்ளதால், ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு பலா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி நிா்வாகிகளில் ஒருவரான உமாமகேஸ்வர நாயுடு அமராவதியில் உள்ள உயா்நீதிமன்றத்தில் ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்து திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை(செப்டம்பா் 21) நடைபெற உள்ளது.

ஆளுநரிடம் பாஜக புகாா்: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 81 போ் கொண்ட அறங்காவலா் குழுவை ஏற்படுத்தியதற்கு மாநில ஆளுநா் பிஸ்வபூஷன் ஹரிசந்தனை ஆந்திர பாஜக தலைவா் வீரராஜு நேரில் சந்தித்து புகாா் செய்தாா். ஆந்திர அரசின் இந்த முடிவு ஆந்திர அறநிலையத்துறை சட்டம், இந்து தா்ம சட்டம் உள்ளிட்டவற்றை மீறுவதாக உள்ளது.

ஆந்திர அரசு நியமித்துள்ள 52 சிறப்பு அழைப்பாளா்களால் சாதாரண பக்தா்களுக்கு ஏழுமலையான் தரிசனம் கிடைப்பது அரிதாகி விடும். எனவே, அரசின் இந்த முடிவை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com