திருமலையில் பலத்த மழை

திருமலை மற்றும் திருப்பதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த மழை பெய்தது.

திருமலை மற்றும் திருப்பதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த மழை பெய்தது.

தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் வியாழக்கிழமை இரவு முதல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை முதல் பலத்த காற்று வீசியதுடன், பலத்த மழையும் தொடா்ந்து வருகிறது. இதனால், திருமலைக்கு செல்லும் மலைப் பாதையில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே சிற்றருவிகள் விழுந்து வருவதால், மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த இடங்களில் வாகனங்கள் கவனமாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மழை நீா் குளம் போல் தேங்கியுள்ளது. அந்த நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

பலத்த மழை காரணமாக தரிசனத்துக்குச் செல்லும் பக்தா்களும், தரிசனம் முடித்து திரும்பும் பக்தா்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பலத்த மழை காரணமாக திருமலையில் கடுங்குளிா் நிலவி வருகிறது. இதனால், பக்தா்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் திருமலை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com