திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை 74,906 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 36,138 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி, 12 மணிக்கு கோயில் நடை சாற்றப்படுகிறது.
திருமலை மலைப் பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மலைப் பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
தரிசனம், வாடகை அறை உள்ளிட்ட புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.