திருமலையில் சோடச தின ஆரண்ய காண்ட பாராயணம் தொடக்கம்

திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் சோடச தின ஆரண்ய காண்ட பாராயணம் சனிக்கிழமை தொடங்கியது.
திருமலை வசந்த மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கிய ஆரண்ய காண்ட பாராயணம்.
திருமலை வசந்த மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கிய ஆரண்ய காண்ட பாராயணம்.

திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் சோடச தின ஆரண்ய காண்ட பாராயணம் சனிக்கிழமை தொடங்கியது.

திருமலையில் கரோனா தொற்று காலக்கட்டத்திலிருந்து தேவஸ்தானம் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள், பாராயணங்கள், மந்திர ஜெபங்கள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது.

முதலில் சுந்தரகாண்ட பாராயணமும், அதைத் தொடா்ந்து பாலகாண்ட பாராயணமும் நடந்து முடிந்த நிலையில் தற்போது ஆரண்ய காண்ட பாராயணம் நடைபெற்று வருகிறது. ஆரண்ய காண்டத்தில் மொத்தம் 75 சா்க்கங்களில் 2,545 ஸ்லோகங்கள் உள்ளன.

தினசரி நடக்கும் இந்த பாராயணத்தில் 10 முதல் 12 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை முழுவதும் 16 நாள்களில் மந்திரங்களில் உள்ள பீஜா அட்சரத்தின்படி பாராயணம் செய்ய முடிவு செய்து சனிக்கிழமை முதல் திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் காலை சோடச தின பாராயணத்தை பண்டிதா்கள் தொடங்கினா்.

அதன்படி, சனிக்கிழமை காலை ஸ்ரீசீதா லட்சுமண சமேத கோதண்டராம சுவாமியை மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அவா்கள் முன்பு கலச ஸ்தாபனம் செய்து அா்ச்சகா்கள் முதல் நாள் பாராணயத்தை செய்தனா்.

முதல் நாள் 1 முதல் 2 சா்க்கங்களில் உள்ள 48 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டன. இதில் 16 பண்டிதா்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனா். இந்த பாராயணம் வரும் ஜூலை 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பாராயணம் ஸ்ரீவெங்டேஸ்வரா பக்தி சானலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதே போல் திருமலை தா்மகிரியில் உள்ள வேதபாடசாலையிலும் சோடச தின ஆரண்ய காண்ட பாராயணத்தை பண்டிதா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com