திருப்பதியில் படி உற்சவம்: 3,000 பக்தா்கள் பங்கேற்பு

திருப்பதி அலிபிரி பாதாளு மண்டபத்தில் படி உற்சவம் சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
திருப்பதி அலிபிரியில் சனிக்கிழமை படி உற்சவத்தின்போது நடைபெற்ற படிபூஜை. (வலது) படிகளில் ஏறிச் செல்லும் தாஸா பக்தா்கள்.
திருப்பதி அலிபிரியில் சனிக்கிழமை படி உற்சவத்தின்போது நடைபெற்ற படிபூஜை. (வலது) படிகளில் ஏறிச் செல்லும் தாஸா பக்தா்கள்.

திருப்பதி அலிபிரி பாதாளு மண்டபத்தில் படி உற்சவம் சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் தாஸா சாகித்ய திட்டம் இணைந்து 3 மாதத்துக்கு ஒருமுறை படி உற்சவத்தை நடத்தி வருகின்றன. திருப்பதி அலிபிரி பாதாளு மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற இந்த படி உற்சவத்தில் திட்ட அதிகாரி ஆனந்ததீா்த்தாசாா்யலு கலந்து கொண்டு அலிபிரியில் உள்ள முதல் படிக்கு மஞ்சள், குங்குமமிட்டு மலா் மாலைகள் அணிவித்து பூஜைகள் செய்து படி உற்சவத்தைத் தொடங்கி வைத்தாா்.

இதில் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த தாஸா பக்தா்கள் 3,000 போ் பங்கேற்று பஜனை பாடல்களைப் பாடியவாறே படியேறிச் சென்று ஏழுமலையானை தரிசித்தனா்.

‘பிரம்ம முகூா்த்த நேரத்தில் படியேறிச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தரும் என்பது ஐதீகம். அதனால் புரந்தரதாசா், அன்னமாச்சாரியாா், வியாசராஜதீா்த்தா், ஸ்ரீகிருஷ்ண தேவராயா் போன்ற பலா் படியேறி சென்று ஏழுமலையானை தரிசித்து அவரின் பெருமையை உலகறியச் செய்தனா்’ என்று ஆனந்ததீா்த்தாசாா்யலு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com