புதிய பரகாமணி கட்டடத்தில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி தொடக்கம்

திருமலையில் கட்டப்பட்டுள்ள புதிய பரகாமணி கட்டடத்தில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியது.
புதிய பரகாமணி கட்டடத்தில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி தொடக்கம்

திருமலையில் கட்டப்பட்டுள்ள புதிய பரகாமணி கட்டடத்தில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியது.

திருமலையில் உள்ள புதிய பரகாமணி கட்டடத்தில் சிறப்பு பூஜைகளை நடத்தி தொடங்கி வைத்த தேவஸ்தான செயல் அதிகாரி தா்மாரெட்டி மேலும் கூறியதாவது:

திருமலை ஏழுமலையானுக்கு பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளைக் கணக்கிடுவதற்காக பெங்களூரைச் சோ்ந்த நன்கொடையாளா் முரளிகிருஷ்ணா அவா்களின் ஒத்துழைப்புடன் அதிநவீன பாதுகாப்புடன் கூடிய புதிய பரகாமணி கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பா் 28- ஆம் தேதி, மாநில முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி புதிய பரகாமணி பவனண்ணாவை திறந்து வைத்தாா்.

கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அங்கு தொடங்கியுள்ளது.

திருமலை பெரிய ஜீயா் சுவாமி முன்னிலையில் அதிகாலை 5.30 மணியளவில் ஏழுமலையான் கோயிலில் இருந்து சிறிய லிப்ட் மூலம் 12 உண்டிகள் லாரியில் கொண்டு செல்லப்பட்டது.

இனி தினமும் அனைத்து உண்டியல்களும் புதிய பரகாமணி பவனுக்கு வந்து சேரும். ஒரு மாதத்துக்குப் பின்னா், கோயிலில் உள்ள பரகாமணி மண்டபம், பக்தா்கள் அமா்ந்து பாா்வையிடுவதற்கு ஏற்றவாறு அமைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com