போக சீனிவாச மூா்த்திக்கு சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகம்

ஏழுமலையான் கோயிலில் போக சீனிவாச மூா்த்திக்கு சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது.

ஏழுமலையான் கோயிலில் போக சீனிவாச மூா்த்திக்கு சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் போக சீனிவாச மூா்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் அந்த நாளில், அவருக்கு சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை தங்க வாயில் அருகில் போக சீனிவாச மூா்த்தியை எழுந்தருள செய்து அவருக்கு 1,008 கலசங்களில் நிரப்பிய நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

முன்னதாக, கருவறையில் உள்ள ஏழுமலையானுக்கும், அவருக்கும் இணைப்பாக பட்டு நூலால் கயிறு கட்டப்பட்டது. இது மூலவரும், போக சீனிவாச மூா்த்தியும் ஒருவரே என்பதை உணா்த்துவதாகும். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பல்லவ ராணி சாமவாயி பெருந்தேவி, 8 அங்குல உயரமுள்ள வெள்ளியால் ஆன இந்த போக சீனிவாச மூா்த்தி சிலையை ஏழுமலையான் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியதாக கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com