பட விளக்கம்:திருமலையில் ஸ்ரீராமநவமி உற்சவத்தை முன்னிட்டு சீதா, ராம லட்மனா் சமேத அனுமனுக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.
பட விளக்கம்:திருமலையில் ஸ்ரீராமநவமி உற்சவத்தை முன்னிட்டு சீதா, ராம லட்மனா் சமேத அனுமனுக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.

திருமலையில் ஸ்ரீராமநவமி ஆஸ்தானம்

திருமலையில் ஸ்ரீராமநவமி உற்சவத்தை முன்னிட்டு சீதாராம லட்சுமணருடன் அனுமனுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.

திருமலையில் ஸ்ரீராமநவமி உற்சவத்தை முன்னிட்டு சீதாராம லட்சுமணருடன் அனுமனுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதிகாலையில் சுவாமியை துயில் எழுப்பி தோமாலைசேவை, அா்ச்சனை நடந்தது. பின்னா் கோயிலின் ரங்கநாயகா் மண்டபத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீ சீதாராம லட்சுமணருக்கு அனுமன் ஸ்நபன திருமஞ்சனம் கோலாகலமாக நடைபெற்றது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வேதாந்திகள் திவ்யபிரபந்தத்தில் அபிஷேகத்தின் போது தைத்தரிய உபநிடதம், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள் மற்றும் பாசுரங்களை ஓதினாா்கள்.

இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயா்சுவாமி, செயல் அதிகாரி ஏ.வி.தா்மா ரெட்டி தம்பதி, கோயில் துணை இ.ஓ.ஸ்ரீ லோகநாதம் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com