யானை மீது ஊா்வலமாக கொண்டுச் செல்லப்பட்ட முத்துக்கள்.
யானை மீது ஊா்வலமாக கொண்டுச் செல்லப்பட்ட முத்துக்கள்.

திருப்பதியில் சீதாராம திருக்கல்யாணம்

திருப்பதி கோதண்ட ராமா் கோயிலில் ஸ்ரீராமநவமி உற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சீதா ராம கல்யாணம் நடைபெற்றது.

ஸ்ரீராமநவமி உற்சவத்தை முன்னிட்டு கோயிலில் மலா்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அதில், உற்சவமூா்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டு வைகானச ஆகம முறைப்படி திருக்கல்யாணம் அா்ச்சகா்களால் நடத்தப்பட்டது. திருக்கல்யாணத்தின் போது பயன்படுத்தப்படும் முத்துக்கள் யானை மீது ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

முதலில் தேவஸ்தான நிா்வாக கட்டடத்தில் கருவூல பிரிவில் முத்துகளுக்கு அதிகாரிகள் சிறப்பு பூஜை செய்தனா். பின்னா், முத்துக்கள் அலங்கரிக்கப்பட்ட பானைகளில் வைத்து அம்பாரிகளின் மீது ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, கோயில் தலைமை அா்ச்சகா் ஆனந்தகுமாா் தீட்சிதரிடம் வழங்கப்பட்டது. திருப்பதியில் முக்கிய தெருக்கள் வழியாக ஊா்வலம் சென்று கோயிலை அடைந்தது.

கல்யாணத்தின் போது இந்த முத்து அட்சதைள் பயன்படுத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கோயில் துணை இஓ நாகரத்னா, ஏஇஓ பாா்த்தசாரதி, கண்காணிப்பாளா் சோமசேகா், கோயில் ஆய்வாளா்கள் சலபதி, சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com