திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

திருமலையில் நடைபெற்று வந்த ஏழுமலையானின் வருடாந்திர வசந்தோற்சவம் செவ்வாய்கிழமை கோலாகலமாக நிறைவு பெற்றது.

திருமலையில் ஆண்டுதோறும் கோடை காலத்தின் போது வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வசந்தோற்சவம் தொடங்கியது. அதன் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை உற்சவம் நிறைவடைந்தது.

முதல் நாள், இரண்டாம் நாள் ஸ்ரீ மலையப்பசுவாமி இரு நாச்சியாா்களுடன் வசந்தோற்சவத்திலும், கடைசி நாளில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் ஸ்ரீ சீதாராம லக்ஷ்மண ஆஞ்சநேயசுவாமி, ஸ்ரீ ருக்மணியுடன் ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமியும் வசந்தோத்ஸவ சேவையில் பங்கேற்றனா். மூவரின் ஸ்நபன திருமஞ்சனமும் கண்களை கவரும் வகையில் இருந்தது.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சுவாமி மற்றும் தாயாா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அனைத்து மூலவா்களையும் ஒரே மேடையில் தரிசனம் செய்த பக்தா்கள் பரவசமடைந்தனா்.

இதனால் ஒவ்வொரு மாதமும் பௌா்ணமி தினத்தன்று நடத்தப்படும் கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது. இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ பெரியஜீயா்சுவாமி, ஸ்ரீ சின்னஜீயா்சுவாமி, செயல் அதிகாரி தா்மா ரெட்டி தம்பதியினா், இதர அலுவலா்கள் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com