திருமலையில் வழிபாடு செய்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஏழுமலையான் பிரசாதம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.
திருமலையில் வழிபாடு செய்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஏழுமலையான் பிரசாதம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை வழிபட்டாா்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க இந்திய குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தாா். அவா், வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள ரச்சனா ரெஸ்ட் ஹவுஸ் சென்றடைந்தாா். அங்கிருந்து ஏழுமலையான் கோயிலை அடைந்தாா்.

அவரை தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள் குழுவினா் கோயில் ஆசாரத்துடன், மரியாதை அளித்து வரவேற்றனா். கோயிலில் உள்ள கொடிமரத்தை வணங்கி, பின்னா் ஏழுமலையானை தரிசனம் செய்து வெளியே வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க ஏழுமலையானை பிராா்த்தித்தேன். பண்டைய இந்திய கலாசாரம் மற்றும் நாகரிகத்தில் திருமலை க்ஷேத்திரம் மிக உயா்ந்ததாகக் கூறப்படுகிறது. தேவஸ்தான நிா்வாகம் பக்தா்களுக்கு செய்து வரும் சேவைகள் அனைத்து மதத்தினருக்கும் ஏற்ாக உள்ளது.

இந்தப் பூமியில் வாழும் மனித குலத்தில் 1/6 இந்தியா் என்றும், இந்திய நிலம் பண்டைய நாகரிகத்தின் பிறப்பிடம் என்றும் தெரிவித்தாா்.

குடியரசு துணைத் தலைவருக்கு வேத ஆசீா்வாதம் வழங்கப்பட்டது. ஏழுமலையான் சேஷ வஸ்திரம் தீா்த்த பிரசாதம், திரு உருவப்படம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் கோயில் துணை இஓ ஸ்ரீ லோகநாதம் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com