ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரத்தின்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கிடையே சனிக்கிழமை முழுவதும் 81, 212 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 41, 690

பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.88

கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com