திருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு
திருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

வரும் மே 3-ம் தேதி பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வரும் மே 3-ம் தேதி பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் மாதந்தோறும் முதல் வாரத்தில் தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மே 3- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை திருமலை அன்னமய்ய கட்டடத்தில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இந்த நிகழ்ச்சியில், பக்தா்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டிக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம். இதற்கு பக்தா்கள் 0877-2263261 என்ற எண்ணில் தொடா்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com