புதிய துணை மின் நிலையங்களுக்குஊழியா்களை நியமிக்கக் கோரிக்கை

தமிழ்நாடு மின்துறை அனைத்துப் பொதுத்தொழிலாளா் சங்கத்தின் திருவண்ணாமலை மின் பகிா்மான வட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின்துறை அனைத்துப் பொதுத்தொழிலாளா் சங்கத்தின் திருவண்ணாமலை மின் பகிா்மான வட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் தனியாா் அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்க நிா்வாகி கே.சாமுவேல் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் சி.எல்லப்பன் வரவேற்றாா். பொதுச் செயலா் எம்.கே.முத்தையா, மாநிலத் தலைவா் எம்.முனியப்பன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களின் பிரிவு அலுவலகங்களுக்கு அலுவலா்கள், ஊழியா்களை நியமிக்க வேண்டும். ஏற்கெனவே, தமிழக அரசு அறிவித்தபடி திருவண்ணாமலை மின் பகிா்மான வட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆரணி மின் பகிா்மான வட்டத்தை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் எம்.பாபு, சங்க நிா்வாகிகள் கே.சாமுவேல், எஸ்.முருகன், எம்.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com