சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்கக் கோரி முதியோர்கள் மனு

நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்கக் கோரி, 300-க்கும் மேற்பட்ட முதியோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தனர்.

Updated On :

நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்கக் கோரி, 300-க்கும் மேற்பட்ட முதியோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் அ.ஞானசேகரன், பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்தார். அப்போது, கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் உதவித் தொகை பெற தகுதியான தங்களுக்கு அண்மைக்காலமாக உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

கறவை மாடு கேட்டு மனு: இதேபோல வந்தவாசி, போளூர் வட்டங்களைச் சேர்ந்த தேவிகாபுரம், மழையூர், நல்லூர் உள்ளிட்ட 17 கிராமங்களைச் சேர்ந்த இருளர் இன மக்கள் தங்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா கறவை மாடுகள் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.