சங்கரதாஸ் சுவாமி விருது பெற்ற ஜூடோ ரத்தினத்துக்கு பாராட்டு விழா

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினத்துக்கு சங்கரதாஸ் சுவாமி விருது வழங்கப்பட்டதை முன்னிட்டு,
Updated on
1 min read

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினத்துக்கு சங்கரதாஸ் சுவாமி விருது வழங்கப்பட்டதை முன்னிட்டு, ஆரணியில் திருவண்ணாமலை மாவட்ட நடிகர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில், ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது.
விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் வி.கே.வாசுதேவன் தலைமை வகித்தார். விருது பெற்ற ஜூடோ ரத்தினம் பேசுகையில், ஆரணியிலுள்ள நாடக நடிகர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் முன்னிலையில் நடித்தவர்கள்.
இப்படிப்பட்ட சிறப்பு பெருமை பெற்ற நாடக நடிகர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு, ஒருங்கிணைந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்வதற்கு தீர்மானம் நிறைவேற்றி, அனுப்புங்கள். உங்களின் நிலைபாட்டை எடுத்துக்கூறி நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ப்பதற்கான ஆவணங்களை செய்கிறோம்.
நான், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கில திரைப்படங்கள் பலவற்றில் சண்டை காட்சி அமைத்துக் கொடுத்துள்ளேன். எனக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாவிட்டாலும், என்னுடைய திறமையால் சிறப்பாக சண்டை காட்சிகளை அமைத்து, பல மொழி படங்களில் வெற்றி பெற்றுள்ளேன். ஆகையால், சங்கரதாஸ் சுவாமிகள் விருது பெற்றது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இதில், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் ஜெ.அண்ணாமலை, வேலூர் நடிகர் சங்க பொதுச்செயலர் ஜெ.சிவக்குமார், திருவண்ணாமலை மாவட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் ஜி.பொன்னம்பலம், ஏ.பாலகிருஷ்ணன், வி.சிவாஅம்மு, கே.திருநா, ஜெ.கிஷோர், கே.விநாயகம், ஏ.டி.மனோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com