கல்லூரி மாணவ - மாணவிகள் தங்களது எண்ணங்களை சிதறவிடாமல், படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று எழுத்தாளரும், அறிவே ஆயுதம் தன்னம்பிக்கைப் பேரவையின் நிறுவனமான அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
திருவண்ணாமலை, சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளநிலை முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரித் தலைவர் பி.ராமச்சந்திர உபாத்தியாயா தலைமை வகித்தார்.
கல்லூரிச் செயலரும், தாளாளருமான எஸ்.கார்த்திகேயன், கல்லூரி கல்வி புல முதன்மையர் அழ.உடையப்பன், பொருளாளர் எஸ்.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ் வரவேற்றார்.
பிரபல எழுத்தாளரும், திருப்பூர் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவரும், அறிவே ஆயுதம் தன்னம்பிக்கைப் பேரவை நிறுவனருமான அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினார். அவர் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் ஒழுக்கத்துடன் கூடிய கல்விதான் அவசியம். படிப்பதற்கு ஏழ்மையும், வறுமையும் தடையல்ல. இந்த போட்டி உலகத்தில் மாணவர்கள் தங்களது எண்ணங்களை சிதறவிடாமல், கல்வியில் மட்டும் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும்.
பெற்றோரின் பொருளாதார நிலையை மாணவ - மாணவிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்கள் கல்வியுடன் தைரியத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கல்விதான் ஒருவரை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.விழாவில், கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் வெ.ராமு, கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ - மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.