வந்தவாசியை அடுத்த கீழ்க்குவளைவேடு கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் (எ) சப்தமாதர்கள் கோயிலில் மஹா சண்டி யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திங்கள்கிழமை சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கலச ஸ்தாபனம், ஸ்ரீசண்டி பாராயணம், பைரவ பலி பூஜை, யோஹினி பலி பூஜை ஆகியவை நடத்தப்பட்டன.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை குழந்தை பாக்கியம், திருமண தடை விலகுதல், சத்ரு ஜெயம் உள்ளிட்டவை வேண்டி மஹா சண்டி யாகம் நடத்தப்பட்டது.
பின்னர், கன்யா பூஜை, வடுக பூஜை, மஹா பூர்ணாஹுதி, அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், கோயில் நிர்வாக அறங்காவலர் சி.பத்ரிநாராயணன், கோயில் ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்த்தி, கோயில் அறங்காவலர் எம்.ஆராவமுதன் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.