அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

வந்தவாசி அருகே விவசாயியை தாக்கியவர் கைது

வந்தவாசி அருகே விவசாயியை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 

Updated On :9 ஏப்ரல் 2018, 11:47 pm

வந்தவாசி அருகே விவசாயியை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 
வந்தவாசியை அடுத்த பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (60). விவசாயி. அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது உறவினர் கோபி (25). இருவருக்கும் நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை ஏழுமலைக்கு சொந்தமான நிலத்தின் வரப்பில் கோபியின் தாய் மல்லிகா மாடுகளை மேய்த்தாராம். இதற்கு ஏழுமலை ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மல்லிகா, கோபி இருவரும் சேர்ந்து ஏழுமலையை தாக்கினராம்.
இதில், காயமடைந்த ஏழுமலை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் கோபி, மல்லிகா ஆகியோர் மீது வழக்குப் பதிந்த தெள்ளாறு போலீஸார் கோபியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.