ஆரணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வித் தகுதியைப் பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணினி மற்றும் இணைய வசதி செய்து தர வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில்...: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் நடத்தி வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, திங்கள்கிழமை திருவண்ணாமலையில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ.ஏழுமலை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏங்கல்ஸ் பிரபு, வட்டத் தலைவர் எம்.மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித சங்கிலி போராட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 21அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

90’ஸ் விஜய்!

சாதி குறித்து அவதூறு பேச்சு! எஸ்சி ஆணையத்தில் மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

யார் இந்த பில்லிசூன்ய மருத்துவர்? ஹாரி கேனை கோல் அடிக்க விடாமல் தடுத்த கானாவின் மந்திரவாதி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


