தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பள்ளிக்கு நவீன தொலைக்காட்சிப் பெட்டி அளிப்பு

வந்தவாசியை அடுத்த தெள்ளாறில் உள்ள ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளிக்கு அந்தப் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில், சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நவீன தொலைக்காட்சிப் பெட்டி (ஸ்மார்ட்  டிவி) வழங்கப்பட்டது.

Updated On :29 மார்ச் 2018, 3:50 am

வந்தவாசியை அடுத்த தெள்ளாறில் உள்ள ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளிக்கு அந்தப் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில், சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நவீன தொலைக்காட்சிப் பெட்டி (ஸ்மார்ட்  டிவி) வழங்கப்பட்டது.
அந்தப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பயன்பாட்டுக்காக இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது.
விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சாந்தி தலைமை வகித்தார். 
தெள்ளாறு கிழக்கு ஒன்றிய அதிமுக செயலர் டி.வி.பச்சையப்பன் தொலைக்காட்சிப் பெட்டியை பள்ளித் தலைமை ஆசிரியர் ப.சீனிவாசனிடம் வழங்கினார்.
பள்ளி ஆசிரியைகள் இரா.சிவகாமி, த.முல்லை, க.வளர்மதி, ச.பாக்கியலஷ்மி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.