செங்கம் வட்ட தமிழ்ச் சங்கத்தின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு சங்கப் பொருளாளரும், சக்தி பாலிடெக்னிக் கல்லூரித் தலைவருமான எஸ்.வெங்கடாசலபதி தலைமை வகித்தார். சங்கத் தலைவர் தனஞ்செயன், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, பழநி, சங்கச் செயலர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் வெற்றிக்கனி வரவேற்றார்.
சங்க கௌரவத் தலைவர் ஆர்.மதியழகன் உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் எக்ஸ்னோரா இந்திரராஜன், ஆர்.மதியழகன் உருவப் படத்தை திறந்து வைத்ததுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்திப் பேசினார்.
தொடர்ந்து, ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளித் தலைவர் பாண்டுரங்கன், வழக்குரைஞர் கஜேந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் ஜி.குமார், செங்கம் மகரிஷி கல்விக் குழுமத் தலைவர் மனோகரன், டிஎஸ்பி சுந்தரமூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் தனுஷ்கோடி, முன்னாள் எம்எல்ஏ வீரபாண்டியன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்கள் பார்த்தசாரதி, அப்துல்சர்தார், தேமுதிக ஒன்றிய துணைச் செயலர் குயிலம்சிவா உள்பட அனைத்துக் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மறைந்த ஆர்.மதியழகன் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
விழாவில், திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மதியழகன், தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள், மறைந்த கௌரவத் தலைவர் ஆர்.மதியழகன் 18 ஆண்டுகளாக பொது வாழ்வில் செய்த பணிகள் குறித்து பேசினார். ஆசைமுஷீர் நன்றி
கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிவகாசியில் பதற்றமான 29 வாக்குச் சாவடிகள்
பாதயாத்திரை சென்றபோது மோதல்: இருவா் கைது

வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் வருகை!

சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

