வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆரணி கல்வி மாவட்ட அளவிலான உடல் கல்வி செயல் திட்டம் குறித்து ஆலோசனை

ஆரணி கல்வி மாவட்ட அளவிலான உடல் கல்வி செயல் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜூன் 2018, 4:04 am

DIN

ஆரணி கல்வி மாவட்ட அளவிலான உடல் கல்வி செயல் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய இரு கல்வி மாவட்டங்கள் இருந்தன. தற்போது கூடுதலாக ஆரணி, போளூர், செங்கம் ஆகிய 3 புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது 5 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆரணி கல்வி மாவட்டம் சார்பில், வட்டார அளவிலான போட்டிகள் நடத்துவதற்காக உடல் கல்வி செயல் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு உடல் கல்வி ஆய்வாளர் முனியன் தலைமை வகித்தார். இதில், ஆரணி, செய்யாறு, பெரணமல்லூர், மேற்குஆரணி ஒன்றியம், தெள்ளார் ஆகிய பகுதிகளிலிருந்து உடல் கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆரணி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் வட்டார விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி வரவேற்றார். உடல் கல்வி இயக்குநர் எஸ்.சீனிவாசன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.