திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் இதுவரை ரூ.2.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்ச் 16-ஆம் தேதி முதல் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, பறக்கும் படைகள் மூலம் மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை மொத்தம் ரூ. ஒரு கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 461, நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.69 லட்சத்து 83 ஆயிரத்து 660 என மொத்தம் ரூ.2 கோடியே 13 லட்சத்து 76 ஆயிரத்து 121 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், உரிய ஆவணங்கள் காண்பித்தவர்களுக்கு ரூ. ஒரு கோடியே 47 லட்சத்து 13 ஆயிரத்து 841 திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் காண்பிக்காதவர்களின் ரூ.67 லட்சத்து
68 ஆயிரத்து 280 விசாரணையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.