ஆரணி தொகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்
By DIN | Published On : 02nd April 2019 09:23 AM | Last Updated : 02nd April 2019 09:23 AM | அ+அ அ- |

ஆரணி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் மேல்மட்டைவிண்ணமங்கலம், முனுகப்பட்டு பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஆரணி மக்களவைத் தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் போட்டியிடுகிறார்.
இவர், ஆரணி பகுதிக்கு உள்பட்ட மேல்மட்டைவிண்ணமங்கலத்தில் திங்கள்கிழமை பிரசாரத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து, கடுகனூர், மேல்நாகரம்பேடு, கொருக்காத்தூர், முனுகப்பட்டு, திருமணி, வேலப்பாடி, கல்லேரிப்பட்டு, பையூர், இரும்பேடு, எஸ்.வி.நகரம், நேத்தபாக்கம், மாமண்டூர், பனையூர், ராந்தம், லாடவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலர் ஆர்.சிவானந்தம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.பி.அண்ணாமலை, மாவட்ட மதிமுக செயலர் டி.ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலர் என்.முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.