அரசுப் பள்ளிக்கு கல்விச் சீர்வரிசைப் பொருள்கள்
By DIN | Published On : 11th April 2019 08:57 AM | Last Updated : 11th April 2019 08:57 AM | அ+அ அ- |

துரிஞ்சாபுரம் ஒன்றியம், மங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த கீழ்பாலானந்தல் அரசு தொடக்கப் பள்ளிக்கு கல்விச் சீர்வரிசைப் பொருள்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்வி மேலாண்மைக் குழுத் தலைவர் ஞானதீபம் தலைமை வகித்தார். முன்னாள் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கணேசன், பள்ளிமேலாண்மைக் குழு முன்னாள் தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் அருணாசலம் வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன், உதவி ஆசிரியர் ஆர்.தேன்மொழி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, பொதுமக்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில், புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் கல்விச் சீராக பள்ளிக்கு வழங்கப்பட்டன.