வட்டித் தொழில் செய்து வருபவர் அலுவலகத்தில் ரூ.60 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 11th April 2019 08:59 AM | Last Updated : 11th April 2019 08:59 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் வட்டித் தொழில் செய்து வருபவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை வருமான வரித் துறையினர் நடத்திய தீவிர சோதனையில், ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் நாகப்பன். வட்டித் தொழில் செய்து வரும் இவரது அலுவலகம், வீட்டில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபடத் தொடங்கினர். தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற சோதனையில் ரூ.60 லட்சம் ரொக்கமும், சில முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சோதனை திருவண்ணாமலை நகர வணிகர்கள், மனை வணிக தொழில் செய்து வருபவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G