மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை
By DIN | Published On : 12th April 2019 08:20 AM | Last Updated : 12th April 2019 08:20 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை நகராட்சி டவுன்ஹால் நடுநிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நூலக வாழ்நாள் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட மைய நூலக நல் நூலகர் சிவக்குமார் தலைமை வகித்தார். நல் நூலகர் கிருஷ்ணன், வாசகர் வட்டத் தலைவர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நூலக வாழ்நாள் உறுப்பினர் அட்டையை வழங்கிப் பேசினார்.
விழாவில், பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G