திமுக வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம்
By DIN | Published On : 17th April 2019 07:06 AM | Last Updated : 17th April 2019 07:06 AM | அ+அ அ- |

கலசப்பாக்கத்தை அடுத்த ஆதமங்கலம்புதூரில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து, அந்தக் கட்சி சார்பில் திங்கள்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு கலந்துகொண்டு வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்துப் பேசினார்.
இதில், கலசப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் எ.வ.வே.கம்பன், ஒன்றியச் செயலர் வழக்குரைஞர் சுப்பிரமணியன், சாவல்பூண்டி சுந்தரேசன், செங்கம் எம்எல்ஏ கிரி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...