விலங்கியல் மன்ற விழா
By DIN | Published On : 17th April 2019 01:46 AM | Last Updated : 17th April 2019 01:46 AM | அ+அ அ- |

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் மன்ற விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விலங்கியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் க.எழிலன் தலைமை வகித்து, தொடக்கிவைத்தார். கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார் வரவேற்றார். துறைத் தலைவர் ச.துரைராஜ் சிறப்பு விருந்தினரான செய்யாறு அரசு மருத்துவர் ஜெ.செந்தில்குமாரை அறிமுகப்படுத்தி பேசினார்.
மருத்துவர் ஜெ.செந்தில்குமார், கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாப்பது, காசநோய், அம்மை நோய், சுவாசம் சம்பந்தமான நோய்கள், அவை பரவும் முறை, அறிகுறிகள், தடுக்கும் முறைகள் குறித்து தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில், விலங்கியல் துறைப் பேராசிரியர்கள் ந.புனிதா, முனைவர்கள் ஞான.பாலசுப்பிரமணியன், ந.சுப்பிரமணி மற்றும் லாவண்யா, பிரதா, தேவிகா, புகழ்வேந்தன், அசோக், பிரபு, கௌரவ விரிவுரையாளர்கள், மாணவ, மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...