வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 04th August 2019 12:45 AM | Last Updated : 04th August 2019 12:45 AM | அ+அ அ- |

வேட்டவலத்தை அடுத்த செல்லங்குப்பம் ஏரியில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செல்லங்குப்பம் ஏரியில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், சொட்டு நீர்ப் பாசனம் மூலம் மரக்கன்று நட்டு வளர்க்கும் முறையையும் தொடக்கிவைத்தார்.
மேலும், தனி நபர் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தோட்டக்கலைத் துறை சார்பில் நீர் தெளிப்பான், சொட்டு நீர்ப்பாசன முறைகளைப் பின்பற்றி விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் விவசாய முறைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
இதையடுத்து, வேட்டவலத்தை அடுத்த நாடழகானந்தல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் உறிஞ்சு குழாய் அமைக்கும் பணியையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் டி.கே.லட்சுமி நரசிம்மன், வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் ராமபிரபு, ஒன்றியப் பொறியாளர்கள் தனவந்தன், பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.