தம்பதி மீது தாக்குதல்: இளைஞர் கைது
By DIN | Published On : 06th February 2019 10:46 AM | Last Updated : 06th February 2019 10:46 AM | அ+அ அ- |

வேட்டவலத்தில் தம்பதியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
வேட்டவலம் - திருக்கோவிலூர் சாலை, சின்னக் கடைத் தெருவைச் சேர்ந்தவர் பெட்டிக் கடை உரிமையாளர் வேலு (40). கடந்த 2-ஆம் தேதி வேட்டவலம் தருமலிங்கம் நகரைச் சேர்ந்த சிவா (22), மதுபோதையில் வேலுவின் பூட்டியிருந்த பெட்டிக் கடையின் கதவை உதைத்தாராம். இதைக் கவனித்த வேலுவின் மனைவி சைதா (32), தட்டிக் கேட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த சிவா, சைதாவைத் தாக்கி, மானபங்கம் செய்தாராம். தடுக்க வந்த வேலுவையும் அவர் கட்டையால் தாக்கினாராம். இதுகுறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து, சிவாவை கைது செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...