தொழுநோய் விழிப்புணர்வுக் கூட்டம்
By DIN | Published On : 10th February 2019 01:05 AM | Last Updated : 10th February 2019 01:05 AM | அ+அ அ- |

செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரட்டவாடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தொழு நோய் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது .
இதில், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்துகொண்டு தொழுநோயின் அறிகுறிகள் குறித்தும், தொழுநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்தும் மாணவர்களிடையே
விளக்கிக் கூறினர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.