தண்டப்பந்தாங்கல் பள்ளியில் திறன்மிகு வகுப்பறை திறப்பு
By DIN | Published On : 04th January 2019 09:49 AM | Last Updated : 04th January 2019 09:49 AM | அ+அ அ- |

வெம்பாக்கம் வட்டம், தண்டப்பந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திறன்மிகு வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிராம கல்விக்குழுத் தலைவர் கற்பகம் செல்வராஜ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர்
கே.உலகநாதன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக வெம்பாக்கம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஏ.பலராமன், ரா.அருணகிரி ஆகியோர் பங்கேற்று புதிதாக அமைக்கப்பட்ட திறன்மிகு
வகுப்பறையை தொடக்கிவைத்தனர். நிகழ்ச்சியின்போது, நம் பள்ளி நம் சொத்து குழு சார்பில், பள்ளிக்கு 10 கையடக்க கணினிகள் (டேப்) நன்கொடையாக வழங்கப்பட்டன. வெம்பாக்கம் வட்டார ஆசிரியர் பயிற்றுநர்கள் சி.கார்த்திகேயன், சண்முகம், வ.உதயசங்கர், ராமஜெயம், பட்டதாரி ஆசிரியர் ஏ.வெங்கடேசன், பள்ளி ஆசிரியர்கள் ஏ.வெங்கடேசன்,
வே.சுதாகர், பு.திருமகள்,
ஜெ.காயத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.