பள்ளி மாணவிகளுக்கு கையெழுத்துப் போட்டி
By DIN | Published On : 04th January 2019 09:49 AM | Last Updated : 04th January 2019 09:49 AM | அ+அ அ- |

அனக்காவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலத்தில் கையெழுத்தை சிறப்பாக எழுதுதல் போட்டி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
அனக்காவூர் வட்டார வள மையத்துக்கு உள்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. போட்டிக்கு அனக்காவூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) ரா.சக்திவேல், வட்டாரக் கல்வி அலுவலர் டி.ரங்கநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் எழுதுதல் போட்டியில் கீழ்நேத்தப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 5-ஆம் வகுப்பு மாணவி
ஆர்.திலகவதி முதல் இடத்திலும், ஆங்கிலம் எழுதுதல் போட்டியில் காரணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 5-ஆம் வகுப்பு மாணவி எஸ்.சதானா முதல் இடத்திலும், 6 முதல்
8-ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் எழுதுதல் போட்டியில் மடிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவி சு.நந்தினி முதல் இடத்திலும், ஆங்கிலம் எழுதுதல் போட்டியில் உக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியின் 7-ஆம் வகுப்பு மாணவி எஸ்.பவித்ரா முதல் இடத்திலும், 9 முதல்
12-ஆம் வகுப்பு வரை தமிழ் எழுதுதல் போட்டியில் தேத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி
எஸ்.பவித்ரா முதல் இடத்திலும், ஆங்கிலம் எழுதுதல் போட்டியில் இதே பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவி வி.நந்தினி முதல் இடத்திலும் தேர்வு செய்யப்பட்டனர்.
அனக்காவூர் ஒன்றிய அளவில் தேர்வு செய்யப்பட்டு, முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையில், வெள்ளிக்கிழமை (ஜனவரி 4) போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதில், தேர்வு செய்யப்படும் மாணவிகள் வருவாய் மாவட்ட அளவில் சனிக்கிழமை (ஜனவரி 5) திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பர் என வட்டார வள மையத்தினர் தெரிவித்தனர்.