செங்கம் ஒன்றியத்தில் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணி ஆய்வு
By DIN | Published On : 07th January 2019 09:55 AM | Last Updated : 07th January 2019 09:55 AM | அ+அ அ- |

செங்கம் ஒன்றியத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் பழநி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 44 கிராம ஊராட்சிகளில் 3,064 பயனாளிகளுக்கு தமிழக அரசின் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் வரும் 21-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளன.
இந்தப் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் பழநி சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கழிப்பறை வசதி இல்லாத வீடுகளின் உரிமையாளர்கள் விண்ணப்பம் அளித்தால் உடனடியாக இலவச கழிப்பறை கட்டுவதற்கான ஆணை வழங்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் பழநி பொதுமக்களிடம் கூறினார்.
உடன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், பணி மேற்பார்வையாளர்கள் இருந்தனர்.