பாஜக மகாசக்தி கேந்திர மாநாடு
By DIN | Published On : 07th January 2019 09:57 AM | Last Updated : 07th January 2019 09:57 AM | அ+அ அ- |

செய்யாறில் பாஜக மகாசக்தி கேந்திர மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சார்பில், செய்யாறிலுள்ள கட்சி அலுவலகத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு பொறுப்பாளர்கள் ஜி.இலட்சுமணன், வீ.கலாநிதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பெருமாள், பன்னீர்செல்வம், அருண்குமார், சங்கர், அருள், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் மற்றும் வழிகாட்டியாக
வடக்கு மாவட்ட துணைத் தலைவர் வந்தவாசி கிருஷ்ண கணேசன் பங்கேற்றார்.
இதில், செய்யாறு நகரத் தலைவர் ராஜ கணபதி கலந்துகொண்டு, பாரத பிரதமரின் இலவச மருத்துவக் காப்பீடுத் திட்டம், இணையதளம் வாயிலாக சிறு, குறு தொழில் புரிபவர்கள் கடன் பெறும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
நகரப் பொருளாளர் ஆர்.சம்பத் மற்றும் சக்தி கேந்திரப்
பொறுப்பாளர்கள், மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்கள்,
பி.எல்.ஏ. பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.