செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், மகளிர் மேம்பாடு ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேராசிரியர் மூர்த்தி தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பெ.தேவி வரவேற்றார். அரிமா சங்க மாவட்டத் தலைவர் ப.நடராஜன், பேராசிரியர்கள் எஸ்.துரைராஜ், வி.கங்காதேவி, சி.டி.ரவிச்சந்திரன், எம்.குமார், தி.கோ.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஏ.சி.ஷர்மிளா, சரியான விகிதாசார உணவுமுறை, காலம் தவறாது உண்ணும் முறை, உடல் நலன் பேணல், ரத்த தானம் குறித்த தவறான கருத்தை போக்குதல், மாதவிடாய் காலங்களில் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள், ரத்த விருத்தி செய்ய உட்கொள்ள வேண்டிய உணவுகள், உடல் ஆரோக்கியத்துக்கான வழிமுறைகள் குறித்து மாணவிகளிடையே எடுத்துரைத்தார். மேலும், மாணவிகள் எழுப்பிய உடல் ரீதியான, மன ரீதியான சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.