அரசுப் பள்ளியில் மன்றங்கள் தொடக்கம்
By DIN | Published On : 03rd July 2019 09:39 AM | Last Updated : 03rd July 2019 09:39 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மன்றங்கள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை தேவந்தி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் திருமூர்த்தி வரவேற்றார். திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு எது இன்பம் என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினார். தொடர்ந்து, தமிழ் இலக்கிய மன்றம், ஆங்கில இலக்கிய மன்றம் உள்ளிட்ட மன்றங்களையும் அவர் தொடக்கி வைத்தார்.