அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளி பலி
By DIN | Published On : 09th June 2019 12:00 AM | Last Updated : 09th June 2019 12:00 AM | அ+அ அ- |

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளி உயிரிழந்தார்.
தேவிகாபுரம் காலனியை சேர்ந்த சீமான் மகன் ராஜி (38). கூலித் தொழிலாளியான இவர், வெள்ளிக்கிழமை இரவு தேவிகாபுரம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உள்ள நிலத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்தினாராம். இதனால், அதே இடத்தில் மதுபோதையில் கிடந்த ராஜி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி அலமேலு அளித்த புகாரின்பேரில், சேத்துப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராஜியின் சடலத்தை மீட்டு, போளூர்அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.