செங்கம் கல்வி மாவட்ட அலுவலக வளாகத்தில் பாரத சாரண, சாரணீயர் படை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அதில், செங்கம் கல்வி மாவட்ட அளவில் செயலராக வெங்கடேஷ், பொருளாளராக வேலாயுதம், ஒருங்கிணைப்பாளராக நல்லாசிரியர் அன்பழகன், கல்வி மாவட்ட பயிற்சியாளராக பாலக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட சாரண, சாரணீயர் படை நிர்வாகிகள் செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் வெங்கடேஷை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், அவர்களுக்கு கல்வி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.